Monday 19 September 2011

கோழி தூக்கம் போட்டால கூடும் புத்துணர்ச்சி்

மதிய நேரம் சிலர் ஒரு பத்து பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு கோழி தூக்கம் போட்டால் போதும்;பூஸ்ட் குடித்தது போன்று புத்துணர்ச்சியாகி விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் மதிய நேரம் 15 முதல் 30 நிமிடங்கள் வரையிலான இதுபோன்ற தூக்கம் நல்லது;இருமடங்கு சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூட அதனை வலியுறுத்துகிறார்கள்.

எனவே இத்தகைய கோழி தூக்கம் போடுபவர்களுக்கு பிரச்சனை இல்லை.ஆனால் இன்றைய அவசர யுக வாழ்க்கையில் பலருக்கு அலுவலகத்தில் மதிய உணவு உண்டதுமே தூக்கம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உடலே காற்று போன டியூப் கணக்காக புஸ்...ஸென்று சக்தி இழந்து சோர்வடைந்து போய்விடும்.அப்படியே மேஜை மீதே தலை சாய்த்துவிடுவார்கள்.

இத்தகைய உடல் சோர்வு மற்றும் சக்தி குறைவு மதிய நேரம் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து நிபுணர்கள் தெரிவிக்கும் காரணங்கள் இங்கே:

இரவில் ஆழ்ந்த தூக்கமின்மை:

நம்மில் பலர் அலுவலகத்தையும், அலுவலக வேலையையும், வீட்டிற்கு எடுத்து வருவார்கள்.அல்லது இரவில் வெகு நேரம் நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ தொலைபேசியில் பேசியபடியோ அல்லது கணினியில் வேலை செய்துகொண்டோ அல்லது நள்ளிரவு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டோ இருப்பார்கள்.இவ்வாறு செய்வது நமது தூக்கத்தின் பிரதான நேரத்தை விழுங்கிவிடும்.

அதாவது முன்னிரவு தூக்கம்தான் சோர்ந்துபோயிருக்கும் நமது நரம்புகளை புத்துணர்வு பெறவும்,உடல் மீண்டும் சக்தி பெறவும் உதவுகிறது.ஆனால் தொடர்ந்து இரவில் தாமதமாக தூங்கி, அதிகாலை எழுந்து வேலைக்கு ஓடுவதால், உங்களது உடலில் உள்ள சக்தியெல்லாம் மதியத்திற்குள் உறிஞ்சப்பட்டுவிடுகிறது.அதனால்தான் மதியம் உடல் சோர்வு ஏற்படுகிறது. எனவே ஒருவருக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது.இவ்வாறு தூங்கும்போது மொபைல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிடுவது இன்னும் சாலச்சிறந்தது.

Thursday 15 September 2011

முதுகுவலிக்கு இனி முற்றுபுள்ளி

ுதுகுவலி வந்தவர்கள், அதற்கு அடிக்கடி இலக்காகிறவர்கள், சில எளிய சுய அணுகுமுறைகளால் முதலுதவி பெறலாம். அவை வருமாறு:
1. பெரிய பிரச்னைக்கு ஆளாகிவிட்டோம் என்று பதறிவிடாமல் மனதை ஓய்வு நிலைக்குக் கொண்டு வாருங்கள். இதைக் குணப்படுத்த முடியும் என்ற சாதகமான மன‌நிலையை‌ப் பெறுங்கள்.

2, வ‌லி அ‌திக‌ரி‌த்தா‌ல்...

வலி அதிகரித்து நீங்கள் எழுந்து நிற்கிற நேரங்களில் எல்லாம் ‌கீ‌ழ்‌க்க‌ண்ட உடற் தோற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.

(அ) நேராக நிமிர்ந்து நில்லுங்கள்.

(ஆ) தரையைப் பார்க்காதவாறு தலை நேர்கோணத்தில் நிற்க வேண்டும்.

(இ) வயிற்றை உள்ளுக்கு தசைகள் மூலம் இழுங்கள். சிறிது நேரம் வயிறு உள்ளடங்கியே இருக்கட்டும்.

(ஈ) இரு தொடைகளும் காலுக்கு மேல் ஒன்றை ஒன்று சந்திப்பது போல் இணைத்து வையுங்கள்.

(உ) முதுகின் கீழ்ப்பகுதி அசைந்தோ, சாய்ந்தோ ஆடாத நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

3. கடுமையான தாக்குதல் வந்தால் முழுமையாக 3-4 நாட்களுக்கு படுக்கை நேராக அசைவு இன்றி மல்லாந்த நிலையில் படுத்திருங்கள். இதுவே வலியைக் குறைக்கும்.

4. வெந்நீர் ஒத்தடம் அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுங்கள்.

5. உட்காரும் போது...

(அ) நேரான முதுகுப் பக்கம் உள்ள நாற்காலி அதுவும் பாதியளவு மட்டுமே சாய்ந்து கொள்ள அமைப்புக் கொண்ட நாற்காலியே சிறந்தது.

(ஆ) இடுப்பைவிட லேசாக உயர்ந்த நிலையில் உங்கள் முழங்கால் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் காலுக்கு சிறிய ஸ்டூல் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள்.

(இ) கால்மேல் கால் போடாதீர்கள். நாற்காலியில் சரிந்து உட்காராதீர்கள்.

(ஈ) உங்கள் வேலை ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து செய்ய வேண்டிய வகைப்பட்டது எனில், இடையிடையே அடிக்கடி எழுந்து நில்லுங்கள். அல்லது சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.
. உட்காரும் போது...

(அ) நேரான முதுகுப் பக்கம் உள்ள நாற்காலி அதுவும் பாதியளவு மட்டுமே சாய்ந்து கொள்ள அமைப்புக் கொண்ட நாற்காலியே சிறந்தது.

(ஆ) இடுப்பைவிட லேசாக உயர்ந்த நிலையில் உங்கள் முழங்கால் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் காலுக்கு சிறிய ஸ்டூல் ஒன்று வைத்துக் கொள்ளுங்கள்.

(இ) கால்மேல் கால் போடாதீர்கள். நாற்காலியில் சரிந்து உட்காராதீர்கள்.

(ஈ) உங்கள் வேலை ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து செய்ய வேண்டிய வகைப்பட்டது எனில், இடையிடையே அடிக்கடி எழுந்து நில்லுங்கள். அல்லது சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.

Wednesday 7 September 2011

பழமொழிகள

கல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

அகல உழுகிறதை விட ஆழ உழு.

அகல் வட்டம் பகல் மழை.

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

அடக்கமே பெண்ணுக்கு அழகு.

அடாது செய்தவன் படாது படுவான்.

அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

அந்தி மழை அழுதாலும் விடாது.

அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.

அறச் செட்டு முழு நட்டம்.

அற்ப அறிவு அல்லற் கிடம்.

அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

அறமுறுக்கினால் அற்றும் போகும்.