Tuesday 28 June 2011

கருத்துச் சோலை: சுட சுட அரசியல்............ காரம்.............. கா...

கருத்துச் சோலை: சுட சுட அரசியல்............ காரம்.............. கா...: "பு திய ஆட்சிக் தொடங்கியதும் 'புதிய முதல்வராய் பொறுப்பேற்றவுடன் முதன் முதலாக டெல்லி சென்று வந்தாரே ஜெயலலிதா என்றார் வம்பய்யா ''அதையேன் ..."

சுட சுட அரசியல்............ காரம்.............. காபி...........

புதிய ஆட்சிக்  தொடங்கியதும் 'புதிய முதல்வராய் பொறுப்பேற்றவுடன் முதன் முதலாக டெல்லி சென்று வந்தாரே ஜெயலலிதா என்றார் வம்பய்யா
 
''அதையேன் கேட்கறே. 'அம்மா' டெல்லிக்கு போனாலும் போனாங்க 'ஐயா'வுக்கு இங்க ஆட்டம் கண்டிருக்கு. அதிமுக-காங்கிரஸ் உறவு வந்துடுச்சோன்னு நடுங்குறாரு.பத்திரிகைங்கதான் அப்படி எல்லாம் சொல்லுது.ஆனால் என்ன நடந்தாலும் சரி.நாங்க காங்கிரஸ் கூட்டணியில இருந்து வெளியேற மாட்டோம்.அதுவே வெளிய அனுப்பினாலும்கூட எங்களை யாரும் பிரிக்க முடியாதுன்னு'எல்லாம் கடிதம் எழுதி கலாய்க்கிறாரு.எதிர்கட்சி அந்தஸ்து இல்லாம கூட இந்தளவுக்கு தோற்றுப்போய் இருக்கோம். இதுக்க  மேலவும் நாங்க தோற்றுட மாட்டோம்னு சொல்றாரு'' என்றுசெய்திராமசாமி  சொன்னார்.

 
'ஒரு வேளை அப்படி ஒரு உறவு மலர்ந்திடுமோ? டெல்லி போன முதல்வர் நாம் நடந்த காலங்களில் இருந்ததைப் போல இந்த முறை இருக்க மாட்டோம்.காங்கிரஸ் உடன் சுமூகமாகவே நடந்துகொள்வோம்னு வேற செயல்பட்டிருக்காங்க. அத வச்சுதான் கலைஞர் பயந்திருப்பாரோ?'- வம்பய்யா தெரியாமல் கேட்டு வைத்தார்.

 
"அடப்ப பாவிங்களா. அரசியலே அங்கதான்பா ஆரம்பமாகிறது. காங்கிரஸ் கூட கூட்டணி வச்சதாலதான் இந்தளவு தோற்றிருக்கோம்.ஈழப் பிரச்சனையில காங்கிரஸ் தலைமைதான் சிங்களத்துக்கு எல்லாவித உதவியும் செய்ததுங்கிறதை தமிழக மக்கள் தெரிஞ்சுகிட்டாங்க.அது நமக்கு தெரியாமப் போச்சு.தெரிந்தாலும் இந்த சனியன் புடிச்ச 2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேட்டிற்காக பொறுத்து போகவேண்டியதாயிச்சு. அது வேற இருந்தாலும் தனியே நின்றிருந்தாகூட ஒருவேளை எதிர்க்ட்சி அந்தஸ்து கிடைச்சிருக்குமோன்னு இப்ப கவலைப்படுறாரு.அடுத்து இப்போ உள்ளாட்சித் தேர்தல் வரப்போகுது. அதையும் கோட்டை விட்டா திமுக-வுல ஒருத்தன் கூட இருக்க மாட்டான்.அதனால காங்கிரச விட்டுட்டு அந்த உள்ளாட்சி தேர்தலை சந்திக்கணும்னு திட்டம் வச்சிருக்காரு தெரியுமா?" என்றார் வம்பய்யா
"அது எப்படிப்பா. காங்கிரஸ் கட்சியை விட்டா இப்போ அவருக்கு வேற நாதியே இல்லை. 2ஜி ஊழல் வழக்குல அடுத்து என்னென்ன நடக்கும்னு எல்லாம் தெரியுமே?"
அவர்கள் என்ன வேண்டுமானாலும் 'கணக்கு' போடட்டும். ஆனால் 'அம்மா' கணக்கு வேற மாதிரி.! மத்திய அரசோடு சுமூக உறவுன்னுதான் சொல்லியிருக்காங்க. மாநில அரசுக்கு இப்போ திமுக- விளையாடிட்டுப் போனதால ஒரு லட்சம் கோடிக்கு மேல நெருக்கடி இருக்கு. மத்திய அரசுதான் உதவணும். அதுக்காக அந்தக் கட்சியோட கூட்டணி எல்லாம் சேர முடியாது. சேர்ந்தால் காங்கிரஸ் தலைமையில நடந்த எல்லாவித ஊழலுக்கு அதிமுக-வும் சேர்ந்து பதில் சொல்ல வேண்டியிருக்கும். தேவையா அது. குஜராத் மோடிகூட பிரதமர் மன்மோகன் சிங்குடன் நல்ல நட்புறவைதான் வச்சிருக்கார்.அதுக்காக அவர் என்ன காங்கிரஸ் கட்சியோட கூட்டணியா வச்சிகிட்டார்.பக்கத்து மாநில முதல்வர் எடியூரப்பா இம்புட்டு இடியையும் தாங்கிட்டு இருக்காரே. மத்திய அரசு உதவி இல்லாமலா. அந்த மாதிரிதான் அதிமுக-வும் உறவை வச்சுக்கும். நல்ல நட்புறவு இருக்கும். ஆனால் கூட்டணி எல்லாம் கிடையாதுங்கிறதை அங்கேயே போட்டுடைச்சு இருக்கார். தில்லுமுல்லு செய்து ஜெயிச்சிட்டுப் போன ப. சிதம்பரம்ணு போட்டுத் தாக்கியிருக்காங்க. அது மட்டுமல்ல மத்திய அரசு கொண்டுவந்த தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்தை ரத்து செய்யணும்னு சொன்னதோடு நிக்காம, அதுக்கான துவக்க விழாவுல தமிழக அரசு சார்பா யாரையும் போகவிடாம புறக்கணிப்பு செய்திருக்காங்க. அதாவது அரசியல் வேற நட்புறவு வேறங்கிறதுதான் அதிமுக-வோட போக்குன்னு'' போட்டுடைத்தார் .
நம்பளை மாதிரியே அந்த அம்மாவும் 'டீல்' பண்ணுவாங்கன்னு நினைச்சிருப்பாரு போல. பார்த்தா சட்டமன்றத்துல 'ராஜபக்சே போர்க் குற்றவாளி.நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடையை கொண்டுவர இந்தியா அழுத்தம் கொடுக்கணும்னு வேற ஒரே பாய்ச்சலா பாய்ஞ்சுட்டாங்க. அதுமட்டுமில்ல, டெல்லியில பிரதமரை சந்திச்சப்போவும் அந்த விசயத்தையே வலியுறுத்தியிருக்காங்க. ஈரேழு பதினான்கு லோகத்துக்கும் நான்தான் தமிழின தலைவர்னு சொல்லிகிட்டிருந்த கலைஞர் டோட்டல் டேமேஜ். அங்கே போர் முடிந்த இரண்டு வருஷமா அப்படித் தீர்மானம் கொண்டுவரணும்னு எல்லோரும் கேட்டுக்கிட்டாங்க.கலைஞர் அதை செய்யல. காங்கிரஸ மனசு நோகக்கூடாதுன்னு விளையாட்டு காட்டினாரு. இப்போ அந்த அம்மா நிஜமாகவே விளையாடிட்டாங்க. பாவம் நான் தமிழன்னு இனிமே அவரால வெளியில சொல்லிக்கவே முடியாதபடி செய்துட்டாங்க'' என்றவாறு சிரிக்காமல் அழுதார் கோபாலு. 
சேனல்-4 வெளியிட்ட ஈழ மக்களின் படுகொலைக் காட்சிகளை பார்த்தீர்களா? அது பற்றி ஒன்றையுமே பேசாமல் விட்டால் எப்படி?"- நம்ம சகோதரனுக்கு நடந்த கொடுமைய பாத்தப்ப கண்ணு கலங்கிருச்சு

 
''எவனோ ஒரு மொழி, நம் இனம் சாராத ஒரு அந்நிய தேசத்துகாரன் முயற்சி எடுத்துக் கொண்டுவந்தது. முதலில் அதற்குத் தலைவணங்கணும். இங்க நம்ம ஆட்களும் அப்படியானதை எல்லாம் மறைச்சுட்டு மானாட மயிலாடன்னு ஆடிக்கிட்டிருந்தாங்க. ஆனால் அந்த சேனல் மனிதர்கள் என்ன செய்தார்கள் பார். ஈழ மக்களின் துயரத்தை அம்பலப்படுத்தி,சிங்கள தேசத்தின் இனவெறியை வெளிச்சம் போட்டு காட்டியிருக்காங்க.இப்போ உலக மனித இனமே அதைப் பார்த்து குமுறிகிட்டு இருக்கு.இங்க பெரிய அண்ணன் மாதிரி இருக்கும் இந்தியா மட்டும் கொஞ்சம் ஒதுங்கியிருந்தா போதும். ராஜபக்சேவை அப்படியே பிரிச்ச மேய்ஞ்சுடுவாங்க. அம்புட்டு கொதிப்புல இருக்காங்க. அதுக்க ஏத்த மாதிரி 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே' என்று இங்க தாய்த் தமிழகத்தல் இருந்து பேசிகிட்டு இருக்கிற நம் தலைவர்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து பெரிய நெருக்கடிய இந்தியாவுக்குக் கொடுக்கணும். சும்மா ஆளாளுக்கு ஏதாவது பேசிகிட்டு இருக்கிறாங்க. ஒருத்தர் மேல ஒருத்தர் குறைசொல்லிக்கிட்டு இருக்கிறாங்க. என்னத்தை சொல்றதுன்னு'' வருத்தப்பட்டார் வம்பய்யா

 
''உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அந்த சேனல்-4 வெளியிட்ட காட்சிகளைப் பார்த்ததில் இருந்தே இங்கே ஒரே காய்ச்சல்தான்.என்ன விதமான போராட்டத்தை நடத்துறதுன்னு தலைவருங்களுக்குள்ள பேசிக்கிட்டு இருக்காங்க. இந்த வீடியோக் காட்சிகளை டெல்லிக்கு எடுத்துக் கொண்டுபோய் வடநாட்டு அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் அழைத்து போட்டுக் காட்டி பிரச்சாரப்படுத்துவதோடு, அவர்களின் ஆதரவையும் திரட்டி பாராளுமன்றத்தில் பிரச்சனைய எழுப்ப வைக்கணும்னு ஒரு முயற்சி நடந்துகிட்டிருக்கு. அது இல்லாமா எல்லா ஆதரவு அமைப்புகளும் ஒன்றுகூட பெரிய கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தவும் பேசிக்கிட்டு இருக்காங்க. இன்னும் ஒரு தரப்பு இந்த வீடியோப் பதிவுகளை ஒவ்வொரு கல்லூரிக்கும் நேரில் எடுத்துக் கொண்டு போய் மாணவர்களிடம் கொடுக்க வேண்டும்.கல்லூரி மாணவர்களின் ஆதரவுதான் பலமானதாக இருக்கும் என்பதோடு வழக்கறிஞர்கள் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்கள்.விரைவில் ஒரு போராட்டம். சிங்கள அரசக்கு எதிராக நடக்கும். அதே போன்று இந்தியா இலங்கைக்கு எந்த விதத்திலும் உதவக்கூடாது என்பதையும் அந்த போராட்டம் சொல்லுமாம். பார்க்கலாம்''

தாயின் தவிப்பு..........!

                 வீட்டீல் நடமாடும் மின்மினி பூச்சி..
                      சின்ன சின்ன பாதம் வைக்கும் ரோஜா..
                   தென்றல் வர சாமறம் வீசும் உன் சிரிப்பு..
                 தேன் வந்து பாயுதே என எழுதும் முன் ்முண்டாசு கவிஙன்
                     நீ பேச அவன் கேட்க என கனா கண்டானோ?
                 தலைவன் சென்றால் பசலை நோய் பிடிக்கும்-தலைவிக்கு
                    தலைமகன் ஊர் சென்றலும் பசலையோ தாயிக்கு
                  சீக்கிரம் வா மகனே இதழ் துடைத்து வைத்திருக்கிறேன்
                     உன்் இனிய முத்தத்திற்கு...........

Monday 27 June 2011

வலை பதிவுக்கு நான் புதுசு

கல்லூரி நாட்கள்  என் எழுத்து பயணத்தை  துவக்குவித்தது...........மீண்டும் அதை வலை பதிவு மூலம் தொடர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.....

பொதுவாக ஆடிய காலும்  பேசிய வாயும் சும்ம இருக்கது என்பார்கள்...எழுதிய கையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். தூங்ஙிகொண்டித்ருந்த கைகளுக்கு தேனீர் கொடுத்து எழுப்பிய வலை பதிவர்கலுக்கு நன்றி.இனி வரும் என் படைப்புகளுக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்  
                                                                                                               விழிவழி