Thursday 11 August 2011

இதயத்தில் அக்கறை உள்ளவர்களுக்காக

இந்தியாவின் பிரபலமான முன்னணி இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர்களில் ஒருவர் கே.எம். செரியன். இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் தேவை. இதுகுறித்த எளிமையான, தெளிவான விளக்கங்களை பிரபலபத்திரிக்கைக்கு கூறிய கருத்துக்கள் இங்கே்

இதய நோய்களைத் தவிர்க்க செய்யவேண்டியது என்ன?
கரோனரி ஆர்ட்டலரி நோய் எனப்படும் மரபுவழியாகப் பெறக்கூடிய நோய், உங்கள் தந்தைக்கு இருந்தால் அது உங்களுக்கும் வர 50 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. உங்களது தாய்க்கும் இருந்தால், இந்த வாய்ப்பு 80 சதவிகிதமாக அதிகரிக்கிறது. உங்களால் தாய் தந்தையை மாற்ற முடியாது. ஆனால் மாற்றிக் கொள்ளக்கூடிய விஷயங்கள் சில இருக்கின்றன. புகைப்பழக்கம், மதுப்பழக்கம், போதுமான உடற்பயிற்சியின்மை போன்றவற்றை நீங்கள் கட்டுப்படுத்தலாம். அதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள். கொழுப்பு நிறைந்த உணவுகளை, உணவில் எண்ணெயைக் குறையுங்கள் எப்போதும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
தற்போது சந்தையில் இதயத்துக்கு நலம் தருபவை என்ற பெயரில் சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் ஆயில், ரைஸ் பிரான் ஆயில் என்று விளம்பரங்கள் வருகின்றன.

எந்த எண்ணெய் உண்மையிலேயே நல்லது?
நமது வளர்சிதைமாற்றத்துக்கு, முக்கியமாக ஹார்மோன்களை எடுத்துச் செல்வதற்கு எண்ணெய் அவசியம். மற்ற எண்ணெயுடன் ஒப்பிடும்போது எங்கள் எண்ணெய் நல்லது என்று ஒவ்வொருவரும் சொல்கின்றனர். நெய் கொஞ்சம் அபாயகரமானது. மற்றபடி அனைத்து எண்ணெய்களுமே ஆரோக்கியத்துக்கு உகந்தவை. திரும்பத் திரும்ப ஒரு எண்ணையை வறுப்பதற்கும், பொறிப்பதற்கும் பயன்படுத்துவதுதான் ஆரோக்கியத் துக்குக் கேடு. தேங்காய் எண்ணெய் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் யாரும் அது ஆரோக்கியமான தில்லை என்று நிரூபித்ததில்லை. கேரளாவில் இன்றும் பெரும் பாலானவர்கள் தேங்காய் எண்ணெய்தான் உபயோகிக்கிறார்கள். என் தந்தைக்கு 96 வயது. அவர் தன் வாழ்நாள் முழுவதும் தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்

...ஒருவருக்கு சமீபத்தில் வெற்றிகரமாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து முடித்திருக்கிறீர்கள், ஆனால் அந்த அறுவைச் சிகிச்சை நான்கு மணி நேரம் தாமதமானது பற்றி சர்ச்சை கிளம்பியிருக்கிறதே...
தானமாகக் கிடைக்க வேண்டிய இதயம் வரத் தாமதமானதால் அறுவைச் சிகிச்சை தாமதமானது. நாம் எது முக்கியமானதோ அதைக் கவனிப்போம். அந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தி ருக்கிறது அது தான் முக்கியமானது. குளோபல் மருத்துவமனையில் இருந்து தானமாகப் பெறப்பட்ட இதயம் எங்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. இதில் டிராபிக் போலீஸ் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறது. தங்களுடைய காரிலேயே 34 கி.மீ தொலைவை 24 நிமிடத்தில் கடந்து, மிக விரைவாகக் கொண்டு சேர்த்தனர். வழியெங்கும் போதிய ஒத்துழைப்பு கிடைத்ததால் தான் இந்தக் காரியம் சாத்தியமானது. அந்த டிரைவர் உண்மையிலே சிறப்பான திறமையுடையவராக இருக்க வேண்டும். காவல் துறை ஆணை யர் உண்மையிலேயே ஒரு நல்ல காரியத்துக்குத் துணைபுரிந்திருக் கிறார். நாங்கள் இதுவரை 42 இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்திருக் கிறோம். எல்லாமே வெற்றிதான்.

காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ காப்பீட்டுத் தொகைகளை அளிப்பதில் வெளிப்படையாக இருக்கின்றனவா?
காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ காப்பீட்டுத் தொகைகளை அளிப்பதில் வெளிப்படையாக இருக்கின்றனவா?


கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கைவிடப்பட்டு புதிய காப்பீட்டுத் திட்டம் வந்திருக்கிறது. இது அதிக நபர்களுக்குப் பயனளிக்கும். நிறைய நோய்களுக்கான சிகிச்சைகள் இந்த காப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. சரியாக பிரிமியம் செலுத்துப வர்களுக்கு ஓரளவு உதவியாக தனியார் இன்சூரன்ஸ் உள்ளது. ஒரு சிகிச்சைக்குப் பணம் தருவதைவிட பணம் தராமல் இருப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதில் தனியார் நிறுவனங்கள் முனைப்புடன் உள்ளன. இன்றைக்கும் நிறைய காப்பீட்டு நிறுவனங்கள் எங்களுக்கு சிகிச்சைக்கான பணம் தரவேண்டியதிருக்கிறது என்ற அளவில் சொல்ல முடியும்.

இதய மருத்துவம் அதிக செலவு பிடிக்கும் ஒன்றாக உள்ளது. அரசின் கொள்கைகளில் ஏதாவது மாற்றங்கள் செய்தால் இதய நோய்களுக்கான சிகிச்சை செலவு குறைய வாய்ப்பு இருக்கிறதா?
அதற்குத்தான் இந்த இன்சூரன்ஸ் திட்டங்கள் தேவை. வெளிநாட்டி லெல்லாம் இத்தகைய மருத்துவக் காப்பீடுகள் பிரபலம். ஜெர்மனியில் ஒருவருடைய சம்பளத்தில் 15 விழுக்காட்டை அரசே பிடித்துக்கொள்ளும். அவர் அரசு ஊழியரானாலும் சரி, தனியார் ஊழியரானாலும் சரி, 15 விழுக்காடு பிடித்துக்கொள்ளப்படும்
.
ஒருவர் தனக்கு இதய நோய் இருப்பது என்பதைத் தெரிந்து கொள்வதற்கான அறிகுறிகள் எவை?
 
மார்புவலிதான். படி ஏறி இறங்கும் போது ஏற்படும் மூச்சிரைப்பு, தூங்குவதற்கு இரண்டு தலையணைகள் தேவைப்படும் நிலை இவையெல்லாம் இருந்தால் அவர் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.


.